தற்போது பயங்கரவாதம் இல்லை!! யாழில் கருத்து தெரிவித்த அமைச்சர்!

9shares

வடக்கு மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு வழங்கப்படும் என மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டதோடு யாழ்ப்பாணம் ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு உள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவுடன் கலந்துரையாடினார்.

அங்கு கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கே பயங்கரமான சூழல் நிலவியது. ஆனால் இப்போது அனைவருக்கும் சுதந்திரமா வாழகூடிய நிலைமையை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளோம் அதேபோல் உங்களுக்கு நிலவும் பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுப்போம் எனவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க