வீதியோரத்தில் கிடந்த கடதாசிப்பெட்டியால் பரபரப்பு!

56shares
Image

வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதை பனிக்கையடியில் குறித்த வெடிபொருட்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பாதை வழியாக சென்றவர்கள் அனாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்ட போது அதற்குள் துருப்பிடித்த பழமையான நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும் கிறினெட் என்பன காணப்பட்டது.

இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் பளைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க