ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி? இருவர் கைது!

18shares

ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சட்டவிரோதமாக ஆட்களிடம் பணம் சேகரித்த நிறுவனமொன்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பகுதியிலுள்ள குறித்த முகவர் நிறுவனத்தில் பணியாற்றிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மற்றும் தலங்கம பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த முகவர் நிலையத்தில் இருந்து 13 கடவுச்சீட்டுகளும், விண்ணப்பப் படிவங்களின் பிரதிகளும், பணம் பெற்றுக்கொண்டமைக்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

விமான பயணச்சீட்டு விநியோகிக்கும் போர்வையில் இவர்கள் இந்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜப்பானில் தொழில்வாய்ப்புப் பெற்றுத்தருவதாகக் கூறி பலரிடம் தலா 12 இலட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பணம் வழங்கிய பலரிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் கடுவல நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க