கூட்டு எதிரணியினரின் ஜனாதிபதி வேட்ப்பாளராக களமிறங்குகிறார் கோட்டா? இறுதி முடிவு வெளியானது?!

99shares

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துவிட்டதாக நம்பகமாக அறியமுடிகின்றது.

ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன் வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக தனது அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கக் கோரும் விண்ணப்பத்தை கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச , அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்துள்ளார்..

அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள அடுத்த வாரம் அவர் அமெரிக்காவுக்கும் செல்லவுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் யார் போட்டியிடப் போவது என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க