முன்னாள் கடற்படைத்தளபதிகளுக்கு கிடைத்த வாய்ப்பு!

5shares

சிறிலங்காவின் இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டு ள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்மிரல் சந்தகிரி கடற்படைத் தளபதியாக இருந்த போது, பல்வேறு சந்தர்பங்களில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டுகள் உள்ளன என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க