இலங்கையில் பேராபத்தில் பௌத்த மதம்- மெதகம தம்மாநந்த தேரர் கவலை

22shares

சிறிலங்காவில் பௌத்த மதம் பேராபத்தை எதிர்நோக்கியிருப்பதாக அஸ்கிரி பீடத்தின் பதிவாளரான துணை மகாநாயக்கர் கலாநிதி மெதகம தம்மாநந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட தற்போது முன்வைக்கப்படும் அனைத்து அரசியல் யாப்பு சீர்த்திருத்தங்கள் ஊடாகவும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாதொழித்து சிறிலங்காவை மதச் சார்பற்ற நாடாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் மெதகம தம்மாநந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பௌத்த உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கொள்கை பிரகடனமொன்றை தயாரிப்பதற்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அஸ்கிரி பீடத்தின் பதிவாளரான துணை மகாநாயக்கர் கலாநிதி மெதகம தம்மாநந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசியல் யாப்பு சீர்திருத்தம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லொழித்து எமது நாட்டை மதச் சார்பற்ற நாடாக மாற்றுவதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் அரசியல் தீர்வு என்று பிரேரணை முன்மொழியப்பட்டது. அன்று முதல் இன்றுவரை முன்னெடுக்கப்படும் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சிகள் வரை பௌத்த மதத்துக்கான முக்கியத்துவத்தை இல்லாதொழிப்பதையே பிரதான இலக்காகக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க