பொலிஸாருக்கு சிக்கிய பெருந்தொகை பொருள்! சிக்கிய நபர் தொடர்பில் வெளியான தகவல்!

20shares

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 400 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவரை சிலாபம் வலய விஷப் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 7.00 மணியளவில் கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹால்தன்டுவன பிரதேசத்தில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் ஹெரோயின் போதை பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஹெரோயின் போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சிறையில் இருந்த காலத்தில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு காரணமாக பாரியளவான ஹெரோயின் வர்த்தகத்தில் சந்தேகநபர் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இதையும் தவறாமல் படிங்க