தமிழர் தாயகத்தை 'கிழக்கிஸ்தானாக' மாற்ற முயற்சி? உண்மையை வெளியிட்டதால் சர்ச்சை!

274shares

கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தான் என்று நினைத்து செயற்படுகின்றீர்களா?

என்று பிரதமர் ரணிலை பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார் .

இந்த கேள்வி இந்தியாவில் இருந்து 'பாகிஸ்தான்'என்ற நாடு பிரிந்து செயற்பட்டதைப் போன்று இலங்கையில் உள்ள கிழக்கு மாகாணம் 'கிழக்கிஸ்தான்' என்ற பெயரில் தனித்துவமாக இயங்குகின்றதா? அதற்கு இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு உண்டா? என்ற பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இது வரை காலமும் கிழக்கு மாகாணத்தை 'கிழக்கிஸ்தானாக' மாற்றுவதற்கு கிழக்கில் உள்ள முஸ்லீம் அரசியல் வாதிகள் அரபு நாடுகளின் துணையுடன் மிகவும் திட்டமிட்டு செயற்படுவதாக முகநூல்கள் ஊடாகவும் இணையதளங்கள் ஊடாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது முதல் தடவையாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிழக்கிஸ்தான் குறித்து வாய் திறந்திருப்பது கிழக்கிஸ்தான் என்ற தனி மாகாணத்தின் உருவாக்க முயற்சிகள் உண்மையாக நடைபெறுகிது என்பதை ஊகிக்க கூடியதாக உள்ளது.

அதுவும் ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் அவரைப் பார்த்து கேட்கப்பட்ட அந்த கேள்வியை அரசியல் என்று கூறி சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

இலங்கையில் தங்களது தாயக மண்ணின் விடுதலைக்காக பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்த தமிழர்களின் நிலம் நிர்வாகம் அதிகாரம் என எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தமிழ் மக்களின் இழப்புகளுக்கு மேல் கட்டியெழுப்பப்படும் அரபு தேசத்தையே நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கிஸ்தான் என்று கூறியுள்ளார்.

குறித்த கிழக்கிஸ்தான் என்ற மாகாண அபிவிருத்திக்கே பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு உதவி வருகின்றனர். கிழக்கில் உள்ள தமிழர்களை கணக்கில் எடுக்காது செயற்படுகின்றனர் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களின் கேள்வி. ஆனால் அதற்கான பதிலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வழங்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் பேச்சிற்கு மிகக் கடுமையான விமர்சனங்களை பிரதி அமைச்சர் அமீரலி அவர்கள் தனது பேச்சில் முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்கள் பேசிய தொகுப்பை கீழே இணைத்துள்ளோம்.

கௌரவ பிரதமரே இது கிழக்கு மாகாணம் என்று நினைத்துள்ளீர்களா?

அல்லது கிழக்கிஸ்தான் என்று நினைத்தீர்களா? நான் உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

உங்களது அமைச்சின் பெயரில் வடக்கு மாகாணம் என்று மட்டுமே உண்டு கிழக்கு சேர்க்கப்படவில்லை. இலங்கைக்கு வருகின் வெளிநாட்டு தூதுவர்கள் அனேகமானவர்கள் வடக்கு மாகாணத்திற்கே செல்கின்றனர் அவர்கள் கிழக்கிற்கு வருவதில்லை கிழக்கில் நடக்கும் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு எங்களை அழைப்பதில்லை எங்களுக்கு தெரியாது பல அமைச்சர்கள் இங்கு வந்து போகின்றனர். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கும் நிகழ்வும் வெபர் விளையாட்டு மைதானத்தில் (சனிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்

ஜெனீவாவில் தற்போது கொண்டுவரப்பட்ட 40/1 தீர்மானத்தை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பாக முன்னைய அரசு கூறியதைப் போன்று இந்த அரசாங்கமும் படைவீரர்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என கூறினால், அது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகவே அமைவதோடு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் சேர்ந்து பாரிய சதி முயற்சியில் ஈடுபட்டார்கள்.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பெரும் ஆதரவோடு மீண்டும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமரானார்.

நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும்.நாட்டின் ஜனநாயகத்தை மதிக்கின்றவர்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவுடன் மீண்டும் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்புச் சட்டம் தெரியாதவர்களுக்கு இதுதான் அரசியல் யாப்புச்சட்டம் என்று சாட்டையடி கொடுத்து நிரூபித்துக் காட்டியுள்ளோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசம் பல அமைச்சர்களை வைத்திருக்கின்றார். ஆனால் அவர்கள் கிழக்கிற்கு வரும் போது எங்களுக்கு தெரியாமலே வந்து போகின்றனர். பிரதமர் வடக்கை அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதில் துரித கவனம் செலுத்துகின்றார் ஆனால் கிழக்கு மாகாண மக்கள் வேதனையுடன் இருக்கின்றார்கள்.வடக்குக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள்,பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு யுத்தத்தினால் அழிவைச் சந்தித்த வடக்கை கட்டியெழுப்பப் பாடுபடுகின்றனர்.

கௌரவ பிரதமரே இது கிழக்கு மாகாணம் என்று நினைத்துள்ளீர்களா?

அல்லது கிழக்கிஸ்தான் என்று நினைத்தீர்களா? நான் உங்களிடம் கேள்வி கேட்க விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளத்திலிருந்து ஏறாவூர்,ஓட்டமாவடி,காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்கு குடிநீர் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உன்னிச்சையை அண்மித்த 14தொடக்கம் 20 வரையிலான கிராமங்கள் குடிநீரின்றி தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றார்கள்.

வவுணதீவு பொதுமக்களும் குடிநீரின்றி பாதிக்கப்படுகின்றார்கள்.

குடிநீருக்கு பல போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கின்றார்கள்.அதுமட்டுமல்ல குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பொதுமக்கள் எங்களுக்கு எதிராக கைநீட்டுகின்றார்கள்.

ஆகவே பிரதமர் அமைச்சரை தெரிவு செய்த நாங்கள் எங்கள் மக்களின் பிரச்சனைகள்,தேவைகளை நிறைவேற்றித்தரவேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவடைதற்குள் குடிநீருக்காக ஏங்கும் எம்மக்களுக்கு 7000 மில்லியன்களை ஒதுக்கி குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்.

கிழக்கு மாகாணத்தின் தேவைகள்,அபிவிருத்திகள் அதிகமாக இருக்கின்றது.வீடில்லாப் பிரச்சனை பாரிய பிரச்சனையாகவுள்ளது.

யுத்தத்தினால் அழிவடைந்த மக்களுக்கு 28,000 வீடுகள் தேவையாக உள்ளது .இதில் 7,000 வீடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மீதியாகவுள்ள 21,000 வீடுகளுடன் 28,000 வீடுகளையும் கிழக்குக்கு வழங்குவதற்கு பிரதமர் கரிசனை செலுத்த வேண்டும்.

அதேபோன்று யுத்தத்தினால் அழிவடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் தொழிற்சாலைகளை மீள்புனரமைப்பு செய்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

குறிப்பாக வாழைச்சேனை கடதாசிசாலையின் தவிசாளரை நியமிக்கும்போது எங்களிடம் கேட்டுத்தான் தவிசாளர் நியமிக்க வேண்டுமென பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன்.

அவ்வாறு இல்லாவிடில் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பு போராடவேண்டி வரும்.

தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் நீடித்து நிலைத்திருக்ககூடிய அரசியல் தீர்வுக்கும்,அபிவிருத்திக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கரிசனை செலுத்தி தமிழ்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றித்தர வேண்டும்.இந்த எதிர்பார்ப்பிலே இந்த அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். என்றார்.

இதையும் தவறாமல் படிங்க