தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழின் உன்னதமான 10-வது செயற்திட்டம் சாட்டியில்!

77shares

தாயக மண்ணையும் மக்களையும் மனதிற்கொண்டு ஐ.பி.சி தமிழால் மாதந்தோறும் முன்னெடுக்கப்படும் சமூக சேவைச் செயற்றிட்டமான உயிர்ச்சுவடு அறப்பணி செயற்றிட்டம் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதிகளில் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்தவகையில் இச் செயற்திட்டத்தின் பத்தாவதும் இவ்வாண்டின் நான்காவதுமான சமூக அறப்பணியாக "மாசற்ற கடற்கரை " எனும் கருப்பொருளில் ஏப்ரல் ஐந்தாம் திகதி இன்று " சாட்டி " கடற்கரையையும் சுற்றாடலையும் சுத்தம் செய்து சமூக விழிப்புணர்வையும் அக்கறையையும் ஏற்படுத்தும் முகமாக கடல் வளத்தை காக்கும் உன்னதமான சமூக அறப்பணிச் செயற்பாடு நடைபெற்றது.

இதையும் தவறாமல் படிங்க