தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை உலக நாடுகளுக்கு தெளிவுப்படுத்த தவறியுள்ளோம்!

364shares

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த தவறியுள்ளோம் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் தெளிவுப்படுத்த தமிழர் தரப்பு தவறியுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் விஜயகுமார் நவநீதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வில் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டி உறுப்பு நாடுகள் கருத்துக்களை வெளியிட முன்வராதமை கவலைக்குரியது என்றும் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் விஜயகுமார் நவநீதன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கடந்த மார்ச் மாத அமர்வில் பிரித்தானியாவினால் முன்வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து கருத்து வெளியிடுமாறு பேரவையின் தலைவர் கோரிய போது ஒரு சில நாடுகளே தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

இந்த விடயம் கவலைதரும் ஒன்றெனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் விஜயகுமார் நவநீதன், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு ஸ்ரீலங்காவில் தமிழர்கள் எதிர்நோக்கிய கொடூரங்களை தெளிவுபடுத்தி, அவர்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் தவறாமல் படிங்க