தற்பொழுது இதையெல்லாம் உறுதிப்படுத்துகிறீர்களா? உங்களுக்கே தெரியாமல் நெருங்கிவரும் பேராபத்து!

  • Shan
  • April 10, 2019
145shares

இலங்கைக்கு நேராக தற்பொழுது சூரிய உச்சம் நிலவுவதால் நாடுமுழுவதும் கடும் வெப்பநிலை நிலவிவருகிறது.

இதுகுறித்து எற்கனவே மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் வெப்பத்தால் ஏற்படக்கூடிய விஷ ஜந்துகளின் தாக்கம் குறித்தும் கூறப்படவேண்டியது அவசியமாகும்.

சூழலின் வெப்பநிலை அதிகரித்துள்ளதனால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குளிர்ச்சியான இடங்களைத் தேடும் காலமாக இது விளங்குகின்றது. இந்த நிலையில் பொதுமக்கள் தமக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும்.

வெப்பத்தின்காரணமாக புகலிடம் தேடும் ஜந்துக்கள் மிகவும் ஆக்ரோசமானவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அவற்றின் எதிரில் எதிர்ப்படும் எதையுமே தாக்குவதற்கு அவை பின் நிற்பதில்லை என கூறப்படுகிறது.

இந்த வெப்ப சூழ்நிலையில் மரங்களுக்கு கீழே ஓய்வெடுப்போர் அதிகமானவர்களாக உள்ளனர். மரங்களுக்கு கீழே ஓய்வெடுக்கும்போது மரக் கிளைகளை நன்றாக அவதானித்துவிட்டே இளைப்பாறவேண்டும். ஏனெனில் விஷப் பாம்புகள் பகல் நேரங்களில் மரங்களில் புகலிடம் தேடுவதுமுண்டு. இவை கொப்புகளிலிருந்து தவறி கீழே விழுவதுமுண்டு.

பொதுவாக விஷ ஜந்துக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களிலேயே அதிக நடமாட்டத்தைக் கொண்டிருப்பதனால் வீட்டுக் கதவுகளை அந்த நேரங்களில் கண்டிப்பாக மூடிவைத்தல் அவசியமாகும். வீடுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விஷ ஜந்துக்களுக்கும் பிடித்த வாசஸ்தலம்தான். எனவே இவை உள்ளே புகுகின்றபோது மிக மிக அமைதியாகவே புகுவதனால் அவை உள்ளே வருவதுகூட தெரியாமல் இருந்துவிடுவோம். எனவே கதவு மூடப்படவேண்டியது அவசியமாகும்.

மேலும் அறை ஜன்னல் கதவுகள் தொடர்பிலும் நாம் கூடிய கவனமெடுக்கவேண்டும். நீண்ட நேரங்களாக அறை ஜன்னல் கதவுகளைத் திறந்துவைப்பதைத் தவிர்க்கவேண்டும். நாகபாம்பு உள்ளிட்ட சில பாம்பு வகைகள் ஜன்னல் அளவு உயரத்துக்குக்கூட நிமிர்ந்து ஊரமுடியுமென்பதனால் இந்த விடயம் முக்கியமானதாகும்.

பழங்காலத்தில் பாய்களையோ கட்டிலையோ முற்றத்தில் விரித்தவாறு சற்று நேரம் மாலையில் தூங்கும் வழக்கம் இருந்தது. அது தற்பொழுதும் சில குடும்பங்களால் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்த நடைமுறையினை மாற்றிக்கொள்ளுதல் அவசியமாகும். ஏனெனில் விரியன் வகையான கொடிய விஷப் பாம்புகள் மாலையானதும் வெளியே சஞ்சரிக்கத்தொடங்குகின்றன.

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு கட்டிலைச் சுற்றி பரிசோதிப்பது அவசியமாகும். போர்வைகளுக்குள் பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்பு அதிகம். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகம் நடந்துமுள்ளன.

டெங்கு நுளம்புக்காக மட்டும் சூழலைச் சுத்தப்படுத்தவேண்டுமென்றில்லை. கொடிய விஷப் பாம்புகளை ஊக்கப்படுத்துவதும் புதர்கள்தான். காரணம் அந்த பாம்புகளுக்கு நன்கு பிடித்த இரையான எலிகள் புதர்களிலேயே தமது வாழிடத்தைத் தக்கவைக்கின்றன. இவை அங்கிருந்து வீட்டு கூரைகளுக்கு தாவும்போது விஷப் பாம்புகள் அவற்றை அவதானித்து வீட்டுக் கூரைகளுக்கு தாவக்கூடும்.

விட்டிற்கு அருகில் கூரையுடன் கிளைகள் தொடுகையுறாதவாறு மரங்கள் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். ஏனெனில் அவற்றிலிருந்துதான் பாம்புகள் கூரைக்கு தாவுகின்றன.

ஆகவே வெப்ப சூழ்நிலையில் விஷ ஜந்துக்களிலிருந்து விலகி இருக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

இதையும் தவறாமல் படிங்க