மானிப்பாயில் வீடுகளுக்குள் புகுந்து சன்னதம் ஆடியவர்களில் இருவரை கைது செய்த பொலிஸார்!

49shares

யாழ்ப்பாணம் மானிப்பாயிலுள்ள வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்த இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைக்கோடரி மற்றும் வாள் ஆகியன மீட்க்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மூன்று வீடுகளுக்குள் நேற்று மாலை புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டது..

மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையில் அடுத்தடுத்து இருக்கும் இரண்டு வீடுகளிலும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலும் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 9 பேர் கொண்ட வன்முறைக் கும்பலே இந்தத் தாக்குதலை முன்னெடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததுடன் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் தெரிவித்தது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கொக்குவில் பகுதியில் வைத்து இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து ஆனைக்கோட்டை பிடாரி கோவிலடியிலுள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள், கைக்கோடரி மற்றும் வாள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க