தமது நாட்டின் பூர்வீக குடிகளை புத்தளத்தில் சந்தித்த தென்னாபிரிக்க தூதுவர்!

  • Jesi
  • April 12, 2019
63shares

இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ் புத்தளம் சிறாம்பையடி பகுதியில் வாழும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது ஆபிரிக்க சமூகத்தினரின் பாரம்பரிய நடனம் மற்றும் பாடல்களை மகிழ்வித்த ஆபிரிக்க சமூகத்தினருடன் தென்னாபிரிக்க தூதுவரும் இணைந்து நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த காலப்பகுதியில், ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் கூலித்தொழிலுக்காக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஆபிரிக்க நாட்டவர்கள் இன்னமும் இலங்கையின் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கமைய இலங்கையின் வடமேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசமான புத்தளம் மாவட்டத்தின் சிறாம்பையடி என்ற கிராமத்தில் வசித்துவரும் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினரை நேற்று வியாழக்கிழமை கொழும்புக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ் நேரில் சென்று சந்தித்தார்.

இதன்போது இலங்கைவாழ் தென் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சமூகத்தினர் அவர்களது பாரம்பரிய நடனம் மற்றும் பாடல்களுடன் தூதுவரை வரவேற்றனர்.

இதன்போது ஆபிரிக்க பூர்வீகக் சமூகத்தினருடன் தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்சும் இணைந்து ஆடிப்பாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இதனையடுத்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்துவரும் ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மக்களுக்கு தென்னாபிரிக்கத் தூதுவர் பல்வேறு உதவிப்பொருட்களையும் வழங்கிவைத்தார்.

இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான தென்னாபிரிக்க தூதுவர் ரொபினா பீ. மார்க்ஸ், ஆபிர்க்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த மக்களை சந்தித்தமை தமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க