மொட்டு- கை கூட்டணி ! கை கூடாத பெப்பே அரசியல் !!

  • Prem
  • April 12, 2019
22shares

சித்திரைப்புத்தாண்டு என்ற விழாக்காலத்தை இந்தவார இறுதியில் கொண்டாக்காத்திருக்கும் தமிழ் -சிங்கள இலங்கையருக்கு இனிமேல் மின்வெட்டு இல்லை என்ற ஒரு ஒளிமிகுந்த செய்தியை சிறிலங்காவின் மின்சாரக்கண்ணா அமைச்சர் ரவி கருணாநாயக்க வழங்கிவிட்டார்.

ஆயினும் மகிந்தவின் கைகளில் உள்ள தாமரை மொட்டை அணைத்துக்கொள்ளும் வகையில் முனையும் சிறிலங்காசுதந்திரக்கட்சி கைகளுக்கு இது ஒளிமிகுந்தகாலமாகத் தெரியவில்லை.

இதனால் சிறிலங்காவின் எதிர்வரும் அரசதலைவர் தேர்தல்களத்தின் வேட்பாளர் யார் என்ற விடயத்தில் இரண்டு தரப்பும் நுள்ளுப்பிராண்டு கிள்ளுப்பிரான்டு விளையாடி தமக்கிடையிலான இடைவெளியை அதிகரித்துள்ளன.

இதனால்தான் இரண்டுதரப்புக்கும் இடையில் 3ஆம் கட்டப்பேச்சு முடிவடைந்தாலும் தமக்கிடையில் ஒரு கூட்டணியை அமைக்கமுடியாமல் கையும் தாமரையும் வெட்டியோடுவது குறித்த பதிவு இது.

இதையும் தவறாமல் படிங்க