ஈழத்துக்கு வரும் கனவுடன் ஐரோப்பிய நாடொன்றிலிருந்த யாழ் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

2874shares

பிரான்சில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடுமையான நோய் காரணமாக உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாயகத்தின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த க.திவாகரன் என்னும் (வயது27) இளைஞரே இவ்வாறு உயிருக்கு போராடி வருவதாக அறியமுடிகிறது.

குறித்த இளைஞன் 5 வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து தந்தை, தாயுடன் சென்று பல வருடங்களாக பிரான்சில் வசித்து வருகிறார்.

வருகின்ற வைகாசி (05) மாதம் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்துக்கு செல்லவிருந்த நிலையிலேயே இவருக்கு இரத்த புற்றுநோய் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவருக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என இளைஞனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(குறிப்பு - குறித்த இளைஞனின் புகைப்படத்தை வெளியிட பெற்றோர் அனுமதிக்கவில்லை)

இதையும் தவறாமல் படிங்க