யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் வாகனம் கோர விபத்து; லண்டனிலிருந்துவந்த யாழ் பெண் பரிதாப பலி!

383shares

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருண்மாறன் கலா என்ற பெண்ணே குறித்த விபத்தில் பலியாகியவராவார்.

இந்த அனர்த்தம் காரணமாக மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் வான் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆராச்சிகட்டுவ பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க