சிறிலங்காவில் புத்தாண்டில் நடந்த பெரும் கோரச் சம்பவம்! 9 பேர் கவலைக்கிடம்!!

  • Jesi
  • April 15, 2019
102shares

புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர், கம்புறுப்பிட்டிய ஒமாரஹேன பகுதியில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 9 பேர் அசிட் வீச்சுக்கு உள்ளாகியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று அதிகாலை இந்த அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்புறுப்பிட்டிய ஒமாரஹேன பகுதியில் உள்ள இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் முற்றியதில் இன்று அதிகாலை இரு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டதுடன், மோதல் இடம்பெற்ற வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் ஒன்று சந்தேக நபர் ஒருவரால் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இந்த அசிட் தாக்குதலுக்கு இரண்டு பெண்கள் உள்ளிட்ட 9 பேர் உள்ளாகியுள்ளதுடன், இதனையடுத்து, அசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மாத்தறை. அக்குரஸ்ஸ மற்றும் கம்புறுப்பிட்டிய வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கோனகங்கார, 17 ஆம் மைல்கல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர், புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பில், கம்புறுப்பிட்டிய மற்றும் கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்