பறிபோகும் பிரதமரின் பதவி! நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சிக்கு முற்றுப்புள்ளி

  • Jesi
  • April 15, 2019
74shares

ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, ஆட்சி கவிழ்ப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்படமாட்டாது என, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜீத்.பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

2018ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலொன்றினை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றினையும் கலைத்தார்.

பாரிய அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்திய இந்த சம்பங்களை தொடர்ந்து நீதி கோரி பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.விபி யினருடன் இணைந்து நீதிமன்றினை நாடினர்.

அதனையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கடந்த டிசெம்பர் மாதம், மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இந்த நிலையில், மற்றுமொரு ஆட்சி கவிழ்ப்பு முயற்சி முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியாகி வருகின்றது.

இதற்கமைய, தற்போது ஐதேகவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ஐதேகவின் ஒரு பகுதி உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று அல்லது நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படும் அரசியல் புரட்சி தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் அஜீத்.பீ.பெரேரா கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசியல் புரட்சியொன்று ஏற்படமாட்டாது என, அவர் கூறியுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட முறைகளுக்கு மாறாக செயற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்த மாட்டார் என, தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, நாடாளுமன்றில் 113 என்ற பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சியில் ஈடுபட்டால் அதனால் பயன் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அரசியல் புரட்சியொன்றை மேற்கொள்ள முடியும் என்றும், எனினும் அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

எனினும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் புரட்சி மேற்கொள்வதில் எந்தவித பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு புதிதாக பிரதமர் ஒருவரை இப்போதும் நியமிக்கும் அதிகாரம் உண்டு எனவும், இதன் பின் நாடாளுமன்றில் பெரும்பான்மை நியமிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க