போர்க் காலத்தில் மக்களுக்கு கை கொடுத்த உணவு! சுவைக்க தயாரா?

  • Jesi
  • April 15, 2019
105shares

யாழ்ப்பாணம் - வடமராட்சிப் பிரதேசம் புழுக்கொடியலுக்கு பெயர்பெற்றது. அங்கேயுள்ள வீடொன்றின் பக்கத்தில் அவித்த பனங் கிழங்குகளை சீவி தும்பை வார்ந்தெடுத்து உலர்த்துவதற்காக கயிற்றில் கட்டி வெயிலில் தொங்க விட்டுள்ளனர். அவை காய்ந்ததும் புழுக்கொடியலாகும். அதனை மாவாக்கினால் போசாக்கு மிகுந்த உணவு தயார்.

இன்றைய தலைமுறைக்கு பனங்கிழங்கின் ஆரோக்கிய வரலாறு தெரியாமலிருக்கலாம்.

பனங்காய் சீசன் முடிய பனம் விதைகளை எடுத்து பாத்தியமைத்து அதில் கிழங்குகள் விழும். கார்த்திகை விளக்கீடு முடிந்து பங்குனி மாதம் முடியும் வரை அந்த கிழங்குகளை கிண்டியெடுப்பர்.

கிழங்குகளை அவித்து குறிப்பிட்டவற்றை மாத்திரம் உடனே பயன்படுத்தினாலும், நீண்டநாள் பயன்படுத்துவதாக இருந்தால் காய வைக்க வேண்டும்.

பச்சையாக கிழங்கை காயவைத்தால் ஒடியல் எனவும், அவித்து காய வைத்தால் புழுக்கொடியல் எனவும் அழைப்பர்.

போர்க் காலங்களில் வட பகுதி மக்கள் உணவு தட்டுப்பாட்டைப் போக்க அவித்துக் காயவைத்த கிழங்கை மாவாக்கி அதில் தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்து குழைத்து உண்டு பசியாறி வந்தனர். இந்த உணவு வகைகளை தான் எம் மூதாதையர்களும் காலம் காலமாக உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.

இப்பொழுது பனங் கிழங்கு சீசன் முடியும் நிலை வந்தாலும் எம்மவர்கள் மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் யாழ்ப்பாண பனங் கிழங்குக்கு தனி மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க