நடுவானில் திடீரென நடந்த சம்பவம்; நெகிழ்ந்துபோன வெளிநாட்டவர்கள்!!

  • Shan
  • April 15, 2019
329shares

இலங்கையில் கொண்டாடப்பட்ட சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளுக்குப் பறந்த சிறிலங்கன் விமான நிறுவன விமானங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களை வரவேற்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்தபோது பயணிகளுக்கான சிற்றுண்டிகளும் திடீரென வழங்கப்பட்டது.

விமானப் பணிப்பெண்கள் ஒவ்வொரு பயணிக்கும் சிற்றுண்டிகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறினர். இந்த நிலையில் விமானத்தில் பயணித்த வெளி நாட்டவர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துபோனதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க