கோலாகல சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்!

12shares
Image

சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் இரு தினங்கள் விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.

நேற்று குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் சிறப்பான முறையில் மெதுவாக சைக்கிள் ஓடுதல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், பலூன் ஊதி உடைத்தல், உழவு இயந்திரம் பெட்டி கொழுவி பின்பக்கமாக செலுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் ஆண், பெண் இருபாலாருக்குமான மரதனோட்ட போட்டியும் இடம்பெற்றிருந்தது. முதல் இடத்தை பெற்றிருந்தவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குமுளமுனை கொட்டுகிணற்று பிள்ளையார் ஆலயத்தில் அலங்கார உற்சவ திருவிழா நடைபெற்று அதன் பின்னர் கலை நிகழ்வுகளும் அதனை தொடர்ந்து விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் நேற்று இரவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க