சமூக ஒற்றுமையை முன்நிறுத்திய மாபெரும் சித்திரை விளையாட்டுவிழா!

11shares
Image

சித்திரை புதுவருடபிறப்பை முன்னிட்டு பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கலை ,கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் விளையாட்டுப் பெருவிழா கழகத்தின் தலைவர் லி.சிவச்செல்வன் தலைமயில் லயன்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறும்.

சமூக ஒற்றுமையை முன்நிறுத்தி மிக பிரமாண்டமாகவும் பெருமையுடனும் நடைபெற்ற கலை கலாச்சார விளையாட்டு பெருவிழா காலை 9.30 மணி தொடக்கம் மாலை 9.00 மணி வரை நடைபெற்றிருந்தது.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சிகளுடன், முட்டி உடைத்தல், கரப்பந்தாட்டம், தலையனைச் சண்டை, பனிஸ் உண்ணுதல், கயிறு இழுத்தல் மற்றும் சங்கீதக் கதிரை, சாக்கோட்டம் போன்ற பல்வேறுபட்ட கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பம்சமாக 2019ம் ஆண்டிற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டியும் வெகு விமரிசையாக இடம்பெற்றிருந்தது. போட்டியில் மருதநிலா அணியை வீழ்த்தி, 786 அணி வெற்றிக்கிண்ணத்தைத் சுவீகரித்துகொண்டது

மேலும் இவ் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களிற்கு சிறப்பு பரிசில்களும், வெற்றிகிண்ணங்களும், காசோலைகளும் வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண உறுப்பினர் செ.மயூறன், நகரசபை உறுப்பினர்களான த.பரதலிங்கம், பா.பிரசன்னா, உதைபந்தாட்டசங்க செயலாளர் க.நாகராஜன் மருத்துவர் சூர்யகுமார், செ.மதுரகன், பெருமளவானபொதுமக்கள் கலந்துகொண்டனர்

இதையும் தவறாமல் படிங்க