வவுனியாவில் புதுவருட தினத்தில் மோதிக்கொண்ட இளைஞர்கள்; பொலிசாரிடம் சிக்கிய மூவர்!

35shares

வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழு மோதலில் ஈடுபட்டமையால் இரு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கோவில்குளம், உமாமகேஸ்வரன் சந்திக்கு அருகாமையில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கார் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் நின்றவர்கள் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சேதமாக்கப்பட்ட இரு வாகனங்களையும் மீட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்துள்ளனர்.

மேலும் மூவரை தேடி வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க