கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவம்; 4 பேர் காயம்!

109shares

கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது கந்தையா கருணானந்தன், கந்தையா இரத்தினசிங்கம், கருணானந்தன் குலோசன், செல்லா கிருசன், ஆகிய நால்வருமே காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிசார் கைது செய்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் பொலிஸார் ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்டதரப்பு பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமது முறைப்பாட்டை செய்துள்ளதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க