எச்சரித்த தேரருக்கு விகாரைக்குள் நடந்த விபரீதம்

30shares

ராஜாங்கனை - சுதர்ஸனாராம விகாரையிலிருந்த தேரர் மற்றும் தேரருக்கு சேவை புரியும் ஊழியர்கள் ஆகியோர் மீது இருவர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

மது போதையிலிருந்த அண்ணன் தம்பி இருவரையும் விகாரைக்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோபமடைந்த இருவரும் விகாரைக்குள் புகுந்து அங்கிருந்த தேரரையும், தேரருக்கு உதவி புரியும் ஊழியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டடு, அங்கு விரைந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதேவேளை, தாக்குதலுக்குள்ளான தேரர் மற்றும் ஊழியர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க