தற்பொழுதுள்ள ஒரே தலைவர் அவர் மட்டுமே.. அமைச்சர் புகழாரம்

21shares

பிரதமர் பதவிக்கு தற்பொழுதுள்ள தகுதியான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு தலைவர் தான் இருக்கின்றார். அவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான்.

இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. சிலர் பொய்யான செய்திகளை அவிழ்த்து விடுகின்றனர்.

இருப்பினும், கட்சியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதையும் தவறாமல் படிங்க