நீராடிக்கொண்டிருந்தவர்களை தாக்கிவிட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்! சிறிலங்காவில் அதிர்ச்சி சம்பவம்!!

206shares

கந்தளாய், பட்டஹதர பகுதியில் குடிபோதையில் வந்த சிலர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தவர்களை தாக்கிவிட்டு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேர் காயங்களுக்கு உள்ளாகி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் அதே பிரதேசத்தை சேர்ந்த மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பட்டஹதர பகுதியில் உள்ள குளத்தில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே நீராடிக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க