இலங்கையில் தமிழர் தாயக பகுதியையே பெரிதும் வாட்டி எடுத்துள்ளது வரட்சி!

14shares

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐந்து இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்திலேயே அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு 99 ஆயிரம் பேர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் அண்மைய மாதங்களாக கடும் வரட்சி நிலை நிலவிவருவதோடு தென்னிலங்கை பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.

வரட்சி காரணமாக வடமாகாணத்தில் இதுவரை இரண்டு இலட்சத்து 8 ஆயிரத்து 947 குடும்பங்களைச் சேர்ந்த 99 ஆயிரத்து 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 174 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 569 பேரும், யாழ்.மாவட்டத்தில் 10 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிர்தது 488 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறாயிரத்து 296 பேரும், முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில் 5720 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மத்திய மாகாணத்தில் 53 ஆயிரத்து 221 பேரும், கிழக்கு மாகாணத்தில் 17,260 பேரும் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சி காரணமாக இவர்களுக்கு தேவையான நிவாரணங்கள் அந்தந்த மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

மேலும் குருநாகலை மற்றும் அநுராதபுரம் போன்ற இடங்களில் கடும் காற்று காரணமாக குடியிருப்புக்கள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்டையில் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க