சிறிலங்காவில் கடுமையான சட்டங்களை பின்பற்றுங்கள்! பொலிஸாருக்கு கடும் உத்தரவு

49shares

புதுவருட விசேட நாட்களான இந்த நாட்களில் மதுபோதையில் அமைதியற்ற வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு காவற்துறை தலைமையகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த ஆலோசனை சகல காவற்துறை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பண்டிகை காலத்தின் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுமாறு காவற்துறை பொதுமக்களை கோரியுள்ளது.

மதுபோதையில் அமைதியற்ற வகையில் செயற்பட்டமை காரணமாக கடந்த மூன்று நாட்களில் 7 மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சகருமான ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி வரை 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க