சிறிலங்காவில் வீட்டினுள் வைத்து கணவன்-மனைவி குத்திக் கொலை; அதிர்ச்சியில் உறைந்துள்ள பிரதேசம்!

174shares

சிறிலங்காவின் கலேவல பகுதியில் அமைந்துள்ள தேவகுவா பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டினுள் வைத்து வெட்டி, குத்தி கொலை செய்யப்பட்ட நிலையிலேயே இந்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

51 மற்றும் 52 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பிரதேசத்தில் கடும் அதிர்வலையினைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.

இதையும் தவறாமல் படிங்க