ஒரு பெண்ணை காதலித்த இரு ஆண்கள்! இறுதியில் நடந்த விபரீதம்

79shares

திருகோணமலை-துறைமுக பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் எனவும் காவற்துறை தெரிவித்தது.

யுவதி ஒருவரை இருவரும் காதலித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

கடற்படை முகாமை அண்மித்த பகுதியில் வாளால் வெட்டியதாக கூறப்படும் சந்தேக நபர் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ள நிலையில், காவற்துறை அவரை கைது செய்துள்ளதாகவும் படுகாயங்களுக்கு உள்ளான சந்தேகநபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் திருகோணமலை பொது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க