புத்தாண்டுக் காலத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்! இலங்கையில் நடந்த சோகம்!!

  • Shan
  • April 16, 2019
103shares

இலங்கையில் இடம்பெற்ற புத்தாண்டுக் காலத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முடுவதும் நிகழ்ந்த பல்வேறு விபத்துச் சம்பவங்களினாலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

மேலும் இந்தச் சம்பவங்களால் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை கடந்த 11ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளில் 1270 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 34 980 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க