வடபகுதியில் நால்வர் கைது! கூரிய ஆயுதங்கள் உட்பட ஒரு தொகை பணம் மீட்பு !

48shares

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நான்கு பேர் நேற்­று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்­க­ளி­டம் இருந்து 3 கத்­தி­க­ளும், கைக்­கோ­டரி ஒன்­றும், சுத்­தி­யல் போன்ற பொருள்­களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்­து­டன் 20 ரூபா நாணயத் தாள்­கள் 200 மற்றும் 100, 500, 1000 ரூபா நாண­யத்­தாள்­கள் என மொத்தமாக அவர்­க­ளி டம் இருந்து 19 ஆயி­ரத்து 500 ரூபா பணம் மீட்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தே­க­ந­பர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்று மாலை முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

இதனையடுத்து அவர்­களை எதிர்­வ­ரும் 22ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­மன்றம் உத்­த­ர விட்டுள்ளது.

அதே­வேளை, கீரி­ம­லைப் பிர­தே­சத்­தில் உள்ள ஆல­யம் ஒன்­றில் நேற்று உண்­டி­யல் உடைத்­துத் திருட்டு நடை­பெற் றுள்­ளது.

அத்­து­டன் சில தினங்­க­ளுக்கு முன்­னர் பிர­தேச சபைக்­குச் சொந்­த­மான விளம்பரப் பதாகை ஒன்று சேத­மாக்­கப் பட்­டி­ருந்­தது.

இந்­தச் சம்­ப­வங்­க­ளு­டன் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு தொடர்­புள்­ளதா என்ற கோணத்­தில் பொலி­ஸார் விசா ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இதையும் தவறாமல் படிங்க