உலகை திரும்பி பார்க்க வைத்த பிரமாண்டம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊரில் நடந்தேறிய விழா

  • Jesi
  • April 20, 2019
1947shares

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வடமராட்சி வல்வெட்டிதுறையில் வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்திர விழா சித்திராப் பெளர்ணமி தினமான நேற்று வெள்ளிக்கிழமை(19) இரவு மிகவும் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.

பிரசித்திபெற்ற யாழ்.வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலய வருடாந்தத் தீர்த்த உற்சவத்தின் போது இந்த இந்திரவிழா வருடம் தோறும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றிரவு வழமை போன்று இந்திரவிழா மின் அலங்காரங்களுடன் கூடிய வகையில் சிறப்பாக இடம்பெற்றது.

வல்வெட்டிதுறை ஊரிக்காடு தொடக்கம் பொலிகண்டி வரையிலான நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின் குமிழ்களினால் வீதிகள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிகளாக இருந்தன.

இந்துக் கடவுள்களின் திருவுருவங்கள் மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தமையும் பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சியளித்தன.

சுமார் நூறுக்கும் மேற்பட்ட புகைக் குண்டுகள் விடப்பட்டிருந்தன. அதில் ஐந்து புகைக்குண்டுகள் 60 அடி நிளமுள்ளவை. அத்துடன் கண்கவர் வான வேடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன.

அத்துடன் பாரம்பரிய நிகழ்வுகளான கரகம், கூத்து நாடகம், வில்லுப் பாட்டு, இசைக்கச்சேரி போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

கடலுக்குள் மேடை அமைத்து இசைக்கச்சேரிகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க