முல்லைத்தீவு சுயாதீன ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது! (இரண்டாம் இணைப்பு)

108shares

இரண்டாம் இணைப்பு

முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இம்மாதம் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

மேலும் முறைப்பாடு பதிவு செய்த கடற்படை அதிகாரி மேலும் சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பதால் அவர்களையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடந்த 07.04.2019 அன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் போது மக்களையும், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் புகைப்படமெடுத்து அச்சுறுத்திய கடற்படையினரின் செயற்பாட்டை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் நேற்று முந்தினம் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் விசாரணைகள் எதுமின்றி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் றே்றைய தினமும் அழைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ட்ட நிலையில், மீண்டும் இன்றைய தினம் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் விசாரணைக்காகச் சென்ற ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, இன்று நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க