வல்வெட்டித்துறையில் தமிழீழ எழுச்சி பாடல் இசைத்த கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில்!

106shares

வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நடைபெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று தீர்த்தத் திருவிழா மற்றும் இந்திர விழாவுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.

இதன்போது ஆலய மகோற்சவப் பெருவிழாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ எழுச்சிப் பாடல்களை நாதஸ்வர இசையில் மீட்டியதாக தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சப்பரம், தேர் உள்ளிட்ட பெரும் விழாக்களின் போது வருடந்தோறும் தவில் நாதஸ்வரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்படுவது வழமையான ஒன்று என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த வருடம் தமிழீழ எழுச்சி பாடல்களை இசையாக மீட்டினார்கள் என தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையிலேயே புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க