யாழ்ப்பாணத்தில் இறப்பு வீட்டுக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • Jesi
  • April 20, 2019
537shares

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் மரண வீடொன்றுக்குச் சென்று திரும்பிய குடும்பத்தவர்களுக்கு இன்றைய தினம் பேரதிர்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆனைக்கோட்டை கூழாவடிக்கு அண்மையில் உள்ள ஒழுங்கையில் இருந்த வீடொன்றிலேயே இன்று (20) சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

வீட்டில் வசிப்பவர்கள் மரணச்சடங்கொன்றுக்கு சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியை சல்லடை போட்டுத் தேடி அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

குறித்த மரணச்சடங்குக்கு சென்று திரும்பிய குடும்பத்தலைவர் வீடு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதையும் தவறாமல் படிங்க