வெளிநாடொன்றில் மட்டக்களப்பு இளைஞர்களுக்கு நேர்ந்த கோரம்; ஊரே சோகத்தில்!

105shares

சவுதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பாறை மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் முகமட் ரிஹாஸ் உவைஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் வெள்ளிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் உணவு உண்பதற்காக மூவரும் சவுதி அதிவேகப் பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதி விபத்து நடந்துள்ளது.

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.

இதையும் தவறாமல் படிங்க