யாழ்ப்பாண மக்கள் தொடர் மகிழ்ச்சியில்! காரணம் என்ன?

  • Jesi
  • April 20, 2019
90shares

யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று சனிக்கிழமை(20)இரண்டாவது நாளாகவும் கடும் மழை பொழிந்துள்ளது.

இன்று பிற்பகல்-02.40 மணியளவில் ஆரம்பமான கடும் மழைவீழ்ச்சி சுமார் அரை மணித்தியாலம் வரை நீடித்துள்ளது.தொடர்ச்சியான இடி முழக்கத்துடன் கடும் மழை பொழிந்தது. இந்நிலையில் தற்போதும் பல்வேறிடங்களில் மிதமான மழை பொழிந்து வருகிறது.

கடும் இடி மின்னலுடன் மழை பொழிகின்ற சந்தர்ப்பத்தில் இடிமின்னல் யாழில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள காரணத்தால் பொதுமக்கள் அச்சம் காரணமாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் வீடுகளிலும்,ஒதுக்குப் புறமான இடங்களிலும் தங்கிவிடுவதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை,நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை நாளை ஞாயிற்றுக்கிழமை(21) வரை தொடருமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பொழியும் சந்தர்ப்பங்களில் இடி,மின்னல் தாக்கமும் அதிகமாகவிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்