சற்று முன்னர் யாழில் நடந்த பாரிய அனர்த்தம் நேரெதிராக மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்!

543shares

யாழ் பலாலி வீதி உரும்பிராயில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. நேருக்கு நேர் வந்த உந்துருளியும் முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் இன்று மாலை 4:15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவர் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. சம்பவ இடத்துக்கு தற்போது விரைந்து வந்துள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விபத்துச் சம்பவம் நடைபெறும் போது, குறித்த பிரதேசத்தில் மழை பெய்துகொண்டிருந்தாகவும் கூறப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க