திடீரென மத்தலவுக்கு மாற்றப்பட்டு தரையிறக்கப்பட்ட விமானம்!

19shares

கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 315 என்ற விமானமே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வருகைதந்த விமானம் சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறு மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க