கிளிநொச்சியில் 5 நாட்களாக மகனை காணாமல் தவிக்கும் தாய்...

178shares

கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்தியசீலன் சத்தியராஜ் எனும் இளைஞன் காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த திங்கட்கிழமை (15.04.2019) முதல் காணாமல் போயுள்ளார்.

உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்ற குறித்த இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் வேலை செய்யும் இடம் மற்றும் உறவினர் வீடுகள் எங்கும் தேடியும் காணவில்லை என்று குறித்த நபரின் தாயார் கவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க