யாழில் தொடரும் துயரங்கள்! பறிபோகும் இளைஞர்களின் உயிர்!

422shares

உரும்பிராயில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் பலியாகியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

யாழ்.பலாலி வீதி உரும்பிராயில் இன்று மாலை 4.15 மணியளவில் உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேருக்கு நேர் வந்த உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒன்றுடன் ஒன்று, மோதியே குறித்த விபத்து ஏற்பட்டது.

சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இருவர் வீதியில் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த யோகேந்திரன் தமிழரசன் ( வயது-19) என்ற இளைஞன் பலியாகியுள்ளார்.

ஆட்டோவுடன் மோதி விழுந்ததில் மோட்டார் சைக்கிளின் கான்டில் உடைந்து கழுத்து பகுதியை வெட்டியுள்ளது என கூறப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க