24 வருடங்களின் பின் சிறிலங்காவை ஆளப்போகும் முக்கிய புள்ளி! இரகசியத்தை சூட்சுமமாக கூறிய அமைச்சர்

150shares

24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றி கொள்ளும் ஒருவரே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு பின்னர் வரலாற்றில் இடம்பிடிப்பவராக இருப்பார்.

நாட்டை தொடர்ந்தும் ஆளப்போகும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் உரிய சந்தர்ப்பத்தில் அறிவிக்கப்படுவார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க