இலங்கை முழுவதையும் அதிரவைத்த திடீர் மரணங்கள்! முழு விபரம் வெளியீடு

127shares

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன், உயிரிழப்புக்களும் அதிகளவில் பதிவாகி உள்ளன.

அந்த வகையில் கடந்த 10 தினங்களில் மாத்திரம் இலங்கை முழுவதிலும் இடம்பெற்ற விபத்துக்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில், 700 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 450 பே காயமடைந்துள்ளனர் மேலும் 81 பேர் உயிரிழந்திருப்பதாக போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 450 பேரில் 186 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் 1000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வீதி விதிமுறைகளை மீறிய 45 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க