கொழும்பு உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களின் ஆட்சி அதிகாரம் இனி ஆளுநர் கைகளில்...

42shares

கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை கொண்டுள்ள மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் 21ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.

அதைத் தொடர்ந்து மேல் மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரின் கீழ் கொண்டுவரப்படும்.

அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்படும் 8 ஆவது மாகாண சபை இதுவாகும்.

முன்னதாக கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ, வடமேல், மத்திய, வட மாகாண, தென் மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்து அவற்றின் ஆட்சி அதிகாரம் ஆளுநர்களின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தற்போது மேல் மாகாண சபையின் ஆட்சிக்காலமும் நிறைவடைகின்றது.

எஞ்சியிருக்கும் ஊவா மாகாணத்தின் ஆட்சிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் தெரியவில்லை.

இதையும் தவறாமல் படிங்க