இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும்

40shares

இலங்கை மக்கள் அனைவரையும் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்வதற்கான புதிய திட்டமொன்றை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

60 வைத்தியசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கவுள்ளதாகவும் டாக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

பிரதேச வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அணில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க