இலங்கையை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!(வீடியோ இணைப்பு)

  • Shan
  • April 21, 2019
1716shares

இலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது.

இதுவரை ஆறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் கடும் அல்லோலகல்லோலத்தில் காணப்படுகிறது.

இந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என இன்னமும் தெரியவராத நிலையில் கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய நாளில் கடைப்பிடிக்கப்படும் நிலையில் இந்த சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

சூத்திரதாரிகள் இதனை நன்றாக திட்டமிட்டே மேற்கொண்டதாக பலதரப்பட்ட தரப்பினரும் தமது சந்தேகங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுலதால் பாதிப்புக்கள் ஏதும் நேரும் என்ற நிலையில் குறித்த இடங்களுக்கு மக்களைச் செல்லவேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க