இலங்கையில் மற்றுமொரு குண்டு வெடிப்பு! தொடரும் பதற்றம்!!

4173shares

முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட கொட்டந்தீவு பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் கொட்டந்தீவு பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே நேற்றிரவு இடம்பெற்றள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்த சம்பவத்தில் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை இன்று காலை ஆறு மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெற்றபோதும் பதற்ற நிலை தொடர்கின்றமை குறிபிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க