குண்டுவெடிப்பதற்கு முன் தேவாலயத்தில் ஆடிப்பாடிய பாலகர்கள்! மனம் பதைபதைக்கும் காட்சி!!

  • Shan
  • April 22, 2019
1961shares

பயங்கரவாதி ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளபட்ட மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் இருந்த நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தேவாலயத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் சின்னஞ்சிறு பாலகர்கள் உள்ளிட்ட மக்கள் இறைமகன் இயேசுபிரானின் திருப்பெயரை உச்சரித்து ஆடியும் பாடியும் மகிழ்ந்து காணப்பட்டனர். இதுகுறித்த புகைப்படங்களே சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் இந்த கொடூர தாக்குதல் தேவாலயத்தின் வெளிப்புறமாக நிகழ்ந்ததனால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களே அதிகமாக கொல்லப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

பயணப்பொதி ஒன்றில் வெடிமருந்தை கொண்டுவந்த பயங்கரவாதி தேவாலயத்தில் அதனை வெடிக்கவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க